அதள பாதாளத்திற்கு சென்ற ‘ஜப்பான்’ திரைப்படம்! கவலைக்கிடமான வசூல் நிலவரம்?
நடிகர் கார்த்தி நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஜப்பான். இந்த திரைப்படத்தினை இயக்குனர் ராஜூமுருகன் இயக்கி இருந்தார். படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அணு இமானுவேல் நடித்திருந்தார். சுனில், பாவா செல்லதுரை, ஆஷ்னா சுதீர், சனல் அமன், கௌஷிக் மஹதா உள்ளிட்ட பல பிரபலங்களுக்கும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படத்தினை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் இந்த படம் தோல்வியை சந்தித்து இருக்கிறது.
கிட்டதட்ட 80 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருவதால் நாளுக்கு நாள் திரையரங்கும், படத்தின் வசூலும் குறைந்து வருகிறது. இந்நிலையில், படம் வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வரை வசூல் செய்து இருக்கிறது என்ற தகவல் கிடைத்திருக்கிறது.
சந்தோஷத்தின் உச்சியில் சாக்ஷி அகர்வால்? எல்லாத்துக்கும் காரணம் கவர்ச்சி போட்டோ தான்…
அதன்படி, ஜப்பான் திரைப்படம் வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் மொத்தமாக 13.95 கோடி மட்டுமே வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதில் 5-வது நாளில் மட்டும் இந்த திரைப்படம் 1.50 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 80 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் இன்னும் 15 கோடியை கூட தாண்டவில்லை என்பதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
மேலும், ஜப்பான் படத்துடன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. குறிப்பாக படம் வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் 40 கோடி வசூல் செய்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.