அயலான் படம் இத்தனை கோடிக்கு விற்பனையா? சாதனை படைத்த சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்திகேயன் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தினை இயக்குனர் ஆர். ரவிக்குமார் இயக்கியுள்ளார். படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். யோகி பாபு, பால சரவணன், பானுப்ரியா, கருணாகரன், இஷா கோப்பிகர், ஷரத் கேல்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தினை 100 கோடி 24AM ஸ்டுடியோஸ் மற்றும் PhantomFX ஸ்டுடியோஸ் இரண்டு நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். கடந்த ஆண்டே வெளியாகவிருந்த இந்த படம் சிஜி வேலைகள் முடியாத காரணத்தால் ரிலீஸ் தேதி தள்ளி சென்றுகொண்டே இருந்தது.
பிறகு ஒரு வழியாக படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அயலான் படம் வெளிநாடுகளில் மட்டும் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.
தேடி வந்த ஆங்கில பட வாய்ப்பு! வெற்றிமாறன் பதிலுக்கு காத்திருக்கும் சூர்யா?
அதன்படி, அயலான் திரைப்படத்தின் வெளிநாட்டு திரையரங்கு உரிமையை ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து சொப்பன சுந்தரி திரைப்படத்தை தயாரித்த ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் வாங்கி இருக்கிறது. கிட்டத்தட்ட 12 கோடிகளுக்கு மேல் கொடுத்து அந்த நிறுவனம் அயலான் படத்தை வாங்கி இருக்கிறதாம்.
சிவகார்த்திகேயன் சினிமா கேரியரில் இதுவரை வெளியான படங்களிலே வெளிநாடுகளில் அதிகம் தொகைக்கு விற்பனை ஆன திரைப்படமாகவும் அயலான் படம் சாதனை படைத்துள்ளது. இத்தனை கோடிக்கு வெளிநாடுகளில் மட்டுமே படம் விற்பனை ஆகியுள்ளதாக வெளியான தகவல் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
அயலான் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 26-ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.