நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஒரு பக்கம் மும்மரமாக நடைபெற்று வருகிறது.படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது.
இந்த திரைப்படம் இந்த ஆண்டு பிரமாண்டமாக 10 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவும் உள்ளது. இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 43-வது படத்திலும் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். அதன்பின் வாடிவாசல் படத்தையும் கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில், இந்த திரைப்படங்களை எல்லாம் முடித்துவிட்டு நடிகர் சூர்யா அடுத்ததாக 500 கோடி பட்ஜெட்டில் ஒரு புதுதிரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம். அந்த திரைப்படத்தினை பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மாகாபாரதம் கதையம்சத்தை வைத்து இந்த திரைப்படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
கேப்டன் மில்லர் வசூல் எவ்வளவு தெரியுமா?
எனவே, மாகாபாரதம் வைத்து திரைப்படம் எடுக்கப்பட்டால் கண்டிப்பாக 500 கோடி பட்ஜெட் செலவாகும். இதன் காரணமாக பாண் இந்தியா அளவில் இந்த திரைப்படத்தை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ஜான்வி கபூர் நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
புகைப்படங்களை வெளியீட்டு தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ள ஜான்வி கபூருக்கு தமிழிலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கிறது. எனவே, அவர் தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிப்பதன் மூலம் அறிமுகம் ஆகவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…