இந்த ஆண்டு வரும் ஏப்ரல் மாதம் தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக பெரிய எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது என்னென்ன திரைப்படங்கள் என்பதனை பற்றிய விவரத்தை இதில் விவரமாக பார்ப்போம்.
பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் இயக்குனர் இளன் அடுத்ததாக நடிகர் கவினை வைத்து இயக்கி வரும் திரைப்படம் தான் ஸ்டார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தில் இருந்து வெளியான பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.
இன்னும் படத்திற்கான ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் தகவல்களாக படத்தின் ரிலீஸ் தேதி குறித்து கிடைத்தது படம் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி வெளியாகும் என்று தான். விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் தான் டிமான்ட்டி காலனி . இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் உருவாகியுள்ளது. இதில் அருள் நிதி மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளார்கள். படத்திற்கான டிரைலர் கூட கடந்த ஆண்டு வெளியானது.
ட்ரைலரை வைத்து பார்க்கையிலே படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பும் அதிகமானது என்றே சொல்லலாம். இந்த திரைப்படமும் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும் திரைப்படம் தான் ரத்னம். இந்த திரைப்படம் வழக்கமான ஹரி ஸ்டைலில் உருவாகி வரும் ஒரு கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தையும் ஏப்ரல் மாதம் தான் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். அதன்படி படம் வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது . விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வணங்கான். இந்த திரைப்படத்தின் டீசர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை வேற லெவலுக்கு கொண்டு சென்றது. இந்த படமும் ஏப்ரல் மாதம் தான் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாம். இன்னும் தேதி குறித்த தகவல் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. மொத்தமாக பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த ஸ்டார், டிமான்ட்டி காலனி 2, ரத்னம், வணங்கான் ஆகிய 4 படங்களுமே ஏப்ரல் மாதம் வெளியாகி ஹிட் ஆனால் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத சம்பவமாக இருக்கும்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…