தமிழ் சினிமாவில் ரஜினி -கமல், விஜய் -அஜித், என்று இவர்களுடைய படங்களுக்கு இடையே போட்டி நிலவுவது போல அந்த வரிசையில் தனுஷ் சிம்புவிற்கு தான் போட்டிகள் இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. அஜித் -விஜய் இவர்கள் இருவரும் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்கவேண்டும் என ரசிகர்கள் ஆசைப்படுவது போல, சிம்பு மற்றும் தனுஷும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு வருகிறார்கள்.
அவர்களுக்காகவே ஒரு சூப்பரான தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், நடிகர் தனுஷ் மற்றும் சிம்பு இருவரும் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்களாம். அது வேறு எந்த திரைப்படமும் இல்லை இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்கை வரலாற்று படம் தான். இந்த படம் உருவாகவுள்ளதாகவும், படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாகவும் முன்னதாகவே தகவல்கள் பரவியது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை எல்லாம் யாரும் மதிக்க கூட மாட்டிக்காங்க! யாஷிகா ஆனந்த் பேச்சு!
ஆனால், இந்த படம் தமிழ் திரைப்படமா அல்லது ஹிந்தி திரைப்படமா படத்தை யார் இயக்குகிறார் என எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. படம் குறித்த தகவல்கள் மட்டும் அவ்வபோது வெளியாகி கொண்டு இருக்கிறது. அந்த வகையில், தான் தற்போது இளையராஜாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படவுள்ள படத்தில் சிம்பு நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதுவும், இந்த திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கதாபாத்திரத்தில் நடிக்க தான் சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் எல்லாம் உண்மை என்றால் கண்டிப்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், சிம்பு இயக்குனர் தேசிங்கு பெரிய சாமி இயக்கத்தில் உருவாகவுள்ள தன்னுடைய 48-வது திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். அதைப்போல, தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அடுத்ததாக தன்னுடைய 50-வது படத்தை அவரே இயக்கி அவரே நடித்தும் வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…