சிவகார்த்திகேயன் : வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்திகேயன் நடிக்கவுள்ள புது படத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெங்கட் பிரபு விஜய்யை வைத்து ‘கோட்’ படத்தை இயக்கி வரும் நிலையில், இந்த படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிவகார்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் இணையவுள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் கூட, இருவரும் பேட்டிகளின் மூலம் படத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். விரைவில் இவர்கள் இணையவுள்ள படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், இந்த படம் எந்த மாதிரி கதையம்சம் கொண்ட படம் என்பது குறித்தும், படத்தில் நடிக்கவுள்ள முக்கிய பிரபலம் குறித்தும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, சிவகார்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் இணையும் இந்த படம் அரசியல் என்டர்டெய்னர் கதையம்சத்தை கொண்ட படமாக எடுக்கப்பட்டு வருகிறதாம்.
இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அவர் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம். சமீபத்தில் தான் சீமானை சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து படம் பற்றி பேசினாராம். அப்போது படத்தில் நடிக்க சீமான் சம்மதம் தெரிவித்துள்ளாராம். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போது சீமான் நடிக்கவுள்ள தகவல் அறிவிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை தெரிவிக்கும் பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக காமெடி கதைகள் மற்றும் சண்டை காட்சிகள் கொண்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த சிவகார்த்திகேயன் புது முயற்சியாக, அரசியல் சார்ந்த கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் இந்த படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி இருக்கிறது.
ஒரு பக்கம் அரசியலில் பிஸியாக இருந்தாலும் சீமான் நடிப்பிலும், ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. ஏனென்றால், சிவகார்த்திகேயன் படத்திற்கு முன்னதாகவே, சீமான் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் ‘LIC’ படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல்கள் பரவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…
சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…
மதுரை : பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக யூ-டியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் கோவை போலீசார்…