Samantha ஒரு காலத்தில் சமந்தாவுக்கு குவிந்து வந்த படங்களின் வாய்ப்பை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். பிறகு அவருடைய சினிமா வாழ்கை சற்று சறுக்கியது என்றே கூறலாம். ஏனென்றால், சமந்தா மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் நோயில் இருந்து குணமாகவேண்டும் என்பதால் படங்களில் நடிக்காமலும், கமிட் ஆகி இருந்த படங்களிலும் இருந்து விலகினார்.
சினிமா துறையை பொறுத்தவரை ஒரு நடிகை தொடர்ச்சியாக படங்களில் நடிக்கவில்லை என்றாலே அவர்களுக்கு வரும் பட வாய்ப்புகள் அப்படியே குறைந்துவிடும். அப்படி தான் சமந்தாவிற்கு நடந்துள்ளது. தற்போது அந்த நோயில் இருந்து சமந்தா குணமடைந்தாலும் கூட அவருக்கு ஆரம்ப காலத்தை போல பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வரவில்லை.
தற்போது, சமந்தா சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இருப்பினும் அவருக்கு பெரிய கம்பேக் கொடுக்க வேண்டிய அளவிற்க்கு பட வாய்ப்பு கிடைத்தால் தான் அவர் பழைய நிலைமைக்கு வரமுடியும் என்றே சொல்லலாம். அவர் கம்பேக் கொடுக்கவே அவருக்கு பெரிய திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அது யாருடைய திரைப்படம் என்றால் நடிகர் விஜயின் திரைப்படத்தில் தான். விஜய் தற்போது தி கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு தன்னுடைய 69-வது திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். அந்த திரைப்படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. கடைசியாக தளபதி 69 படத்தை இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி தான் இயக்க போகிறார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், அந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா தான் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்ற வருகிறதாம் . இது உண்மையாக இருந்தால் விஜய்யுடன் நடிகை சமந்தா இணையும் நான்காவது படம் இதுவாகும். முன்னதாக நடிகர் விஜய்யுடன் மெர்சல். தெறி படங்களில் ஜோடியாக சமந்தா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றயை நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…
சென்னை: கடந்த நான்கு நாட்களாக ஏந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிவேகமாக வந்த கார்,…
சென்னை : கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை அருகில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. நாளை (9ஆம்…