பட வாய்ப்புகள் இல்லை! திருமணத்திற்கு தயாரான ரெஜினா?
Regina Cassandra தமிழ் சினிமாவில் மாநகரம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, சிலுக்குவார்ப்பட்டி சிங்கம், நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரெஜினா. இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது பெரிய அளவிற்கு பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் கூட சின்ன சின்ன படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார்.
read more- சாய் பல்லவி பெயரில் பண மோசடி? வழக்கு தொடர்ந்ததா ‘RBI’? உண்மை இதோ!!
ஒரு காலத்தில் ஸ்டார் ஹீரோயினாக ஜொலித்த ரெஜினா. தற்போது பட வாய்ப்புகள் குறைந்து வருவதால் வெப் சீரிஸ்களில் கவனம் செலுத்து வருகிறார். தொடர்ந்து வெப் சீரிஸ்களில் பிஸியாக நடித்தும் வருகிறார். பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் இவர் அடிக்கடி வதந்திகளிலும் சிக்கி கொள்கிறார் என்றே கூறலாம்.
READ MORE – அண்ணன் – தம்பிக்கு ஜோடியாக நடிக்கும் அதிதி ஷங்கர்! உங்க காட்டுல மழை தான்!
குறிப்பாக இளம் ஹீரோ சந்தீப் கிஷனுடன் ரெஜினா காதலிப்பதாக வதந்தி பரவியது. அதில் உண்மை இல்லை என்று சந்தீப் சொன்னதும் இந்த வதந்தியான தகவல் நின்றது. அதனை தொடர்ந்து தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், ரெஜினாவின் திருமணம் பற்றி தான். 33 வயதாகும் ரெஜினா விரைவில் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்வில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
READ MORE – அம்பானி வீட்டு திருமணம்: பாடகி ரிஹானா வாங்கிய பிரமாண்ட சம்பளம்?
பட வாய்ப்புகள் குறைந்து வருவதால் அனைத்து ஹீரோயின்களையும் போல ரெஜினாவும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் வெளியாகி வருகின்றன. தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகத் தெரிகிறது. அவர்களது குடும்பத்தினரிடையே பேச்சுவார்த்தையும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இது வதந்தியா அல்லது உண்மையான தகவலா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.