Rathnam box office [file image]
Rathnam : விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படம் உலகம் முழுவதும் 11 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ரத்னம். இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்து இருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இதற்கு முன்னதாக விஷால் மற்றும் இயக்குனர் ஹரி கூட்டணியில் வெளியான தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும் , விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கும் நிலையில், இந்த ரத்னம் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது என்றே கூறலாம். ஆனால், எதிர்பார்ப்பை முழுவதுமாக இந்த படம் பூர்த்தி செய்யவில்லை என்றே கூறலாம்.
படம் பார்த்த பலரும் படம் சுமாராக இருப்பதாகவே கூறி வருகிறார்கள். விமர்சனங்களை வைத்து பார்க்கையில் படத்திற்கு வெளியானதில் இருந்து இப்போது வரை கலவையான விமர்சனங்கள் மட்டுமே பெற்று வருகிறது. இதனால் படத்தின் வசூலும் சற்று எதிர்பார்த்த அளவிற்கு பெறவில்லை என்றே கூறவேண்டும்.
அந்த வகையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 3.57 கோடி வசூல் செய்து இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து படம் வெளியான நாளில் இருந்து மொத்தமாக 5 நாட்கள் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை படத்திற்கு வசூல் ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்துள்ளது என்றே கூறலாம்.
அதன்படி, சனிக்கிழமை 4.05 கோடியும், ஞாயிற்றுக்கிழமை 3 கோடியும், திங்கள் கிழமை 1.83 கோடி என மொத்தமாக இந்த படம் வெளியான நாளில் இருந்து 11 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படத்தை பார்க்க மக்கள் கூட்டம் திரையரங்கிற்கு சென்று கொண்டு தான் இருக்கிறார்கள்.
சென்னை : இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது…
பெங்களூர் : இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தில் இருந்த…
சென்னை : நேற்றைய தினம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வருகிறார். அப்படி…
டெல்லி : உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அவர்,…
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை…