லால் சலாம் திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
லால் சலாம்
இயக்குனரும், ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா அடுத்ததாக லால் சலாம் திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், நிரோஷா, தம்பி ராமையா, கபில்தேவ், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
கேமியோ கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த்
இந்த லால் சலாம் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுக்காக சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவர் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதை படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போதே அறிவித்துவிட்டார்கள். படத்தில் இவருடைய காட்சிகள் மட்டும் 45 நிமிடங்கள் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்
லால் சலாம் திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் குறித்த விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. அதன்படி, இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் 40 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஃபைட்டர் படத்திற்கு இந்த நிலைமையா? 200 கோடியை நெருங்க முடியாமல் திணறல்!!
வழக்கமாக ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு சம்பளமாக 100 கோடிகளுக்கு மேல் வாங்கி வருகிறார் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால், கேமியோ ரோலில் நடிக்க அவர் சம்பளமாக 40 கோடி வாங்கிய தகவலை பார்த்த நெட்டிசன்கள் கேமியோ கதாபாத்திரத்திற்கே இவ்வளவா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை மாதம் ஒரு கும்பல்…
சென்னை: குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில்…