தீபாவளி வசூல் வேட்டைக்கு தயாரான வேட்டையன்? மிரட்டல் அப்டேட் இதோ!

Vettaiyan

நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து தனது மகள் இயக்கத்தில் வெளியான லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படங்களை தொடர்ந்து அவர் தற்போது ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனரான டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபோசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷ்ரா விஜயன், கிஷோர், ரோகினி, ராவ் ரமேஷ், ஷாஜி சென் உள்ளிட்ட பல  பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் தெரியுமா?

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பதற்கான தகவல் கிடைத்து இருக்கிறது. அதன்படி, வேட்டையன் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியீட்டால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். வசூல் ரீதியாகவும் படத்திற்கு நல்ல வசூல் கிடைக்கும் என்பதால் படத்தை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்