பட்ஜெட் 40 கோடி… ஓடிடியில் கூட யாரும் வாங்கல! சூரி படத்திற்கு வந்த சோதனை!

soori

Garudan காமெடி நடிகராக கலக்கி வந்த நடிகர் சூரி  சமீபகாலமாக ஹீரோவாகவும் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி இருந்த விடுதலை திரைப்படத்தில் கூட நடிகர் சூரி ஹீரோவாக நடித்து இருந்தார். படமும் விமர்சன ரீதியாக பெரிய அளவில் மக்களுக்கு மத்தியில் வெற்றி அடைந்தது.

READ MORE- அவனை போக சொல்லு..’இல்லனா நடிக்க மாட்டேன்’! வடிவேலு மோசமான செயல்?

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகத்திலும் நடிகர் சூரி நடித்து முடித்துள்ளார். ஆனால், இந்த இரண்டாவது பாகத்தில் அவருடைய கதாபாத்திரத்தை விட விஜய் சேதுபதி உடைய கதாபாத்திரம் தான் நிறைய காட்சிகளில் இடம்பெறும் என தெரிகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூரி கருடன் என்ற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தினை பிரபல இயக்குனரான துரைசெந்தில் குமார் இயக்கி இருக்கிறார். படத்தில் உன்னி முகுந்தன், சசிகுமார், ரேவதி ஷர்மா, சசிவதா, ரோஷினி ஹரிப்ரியம், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி, துஷ்யந்த், சுமா ராஜேந்திரன் & பரகிதா  உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.

READ MORE-நம்பி ஏமாந்துட்டேன்! ‘வாழ்க்கை போச்சு’… நடிகை கிரண் வேதனை!

படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தில் இருந்து சின்ன டீசர் வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியது.  படத்தின் ரிலீஸ் தேதி எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்துள்ளனர். முன்னதாக படம் மார்ச் மாதம் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகி இருந்தது.

அதன்பிறகு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.  இந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்வது எதற்காக என்ற காரணம் வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்த திரைப்படம் 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட திரைப்படம் எனவே படத்தின் பட்ஜெட்டுக்கு பாதி கோடியாவது ஓடிடி உரிமையில்  விற்பனை செய்ய வேண்டும் என்ற முனைப்பில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இருக்கிறதாம்.

READ MORE- என்னோட சந்தோஷம் எல்லாம் போச்சு! கதறிய சிம்ரன்? வெளியான சீக்ரெட்! 

எனவே பல ஓடிடி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையும் நடைபெற்றிருக்கிறது. ஆனால் எந்த ஓடிடி  நிறுவனமும் இந்த கருடன் திரைப்படத்தை வாங்க முன்வரவில்லை. இதன் காரணமாக தான் படத்தின் ரிலீஸ் தேதியை இன்னும் முடிவு செய்யாமல் படக்குழு இருக்கிறதாம்.  எனவே படத்தின் ஓடிடி  உரிமையை நிறுவனம் வாங்கிய பிறகு படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்