விக்ரம் எனும் மெகாஹிட் படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது.
வசூல் ரீதியாக படம் உலகம் முழுவதும் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் எழுந்துள்ளது. இதற்கிடையில், படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்ற விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.
அதன்படி, லியோ படத்தை இயக்கியதற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சம்பளமாக 22 கோடி வாங்கி இருக்கிறாராம். அவருக்கு சம்பளமாக பேசப்பட்டு இருந்தது 20 கோடி தானாம் ஆனால், சம்பளமாக அவருக்கு 22 கோடி கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.
மேலும், ஏற்கனவே லியோ படத்தை இயக்கியதற்கு லோகேஷ் கனகராஜ் லோகேஷ் கனகராஜ் இருக்கு சம்பள விஷயத்தில் தயாரிப்பு நிறுவனம் பாக்கி வைத்ததாகவும், இதனால் லோகேஷ் கனகராஜ் மிகவும் அப்செட்டில் இருக்கிறார் என்ற தகவலும் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வைரலாகி பரவி வந்த நிலையில் அதற்கு மிகவும் வருத்தத்தில் லோகேஷ் கனகராஜ் இருக்கிறாராம்.
ஏனென்றால், படம் வெளியாவதற்கு முன்பே சம்பளம் லோகேஷ் கனகராஜ் கொடுக்கப்பட்டு விட்டதாம். எனவே, தனக்கு சம்பளம் கொடுக்கப்பட்டு விட்டாச்சு வதந்தி தகவலை பரப்ப வேண்டாம் என்று லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் லியோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினியின் 171 வது திரைப்படத்தில் காண வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…