Goundamani தமிழ் சினிமாவில் எத்தனை காமெடி நடிகர்கள் வந்தாலும் நடிகர் கவுண்டமணிக்கு என்றுமே தனி இடம் இருக்கும் என்றே கூறலாம். இப்போது அவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் அவருடைய காமெடி காட்சிகள் தினமும் நாம் விரும்பி பார்க்கும் சேனல்களில் ஒளிபரப்பாகி கொண்டு தான் இருக்கிறது. ஒரு காலத்தில் எல்லாம் கவுண்டமணி கால்ஷீட் கிடைக்காமல் பல பெரிய இயக்குனர்கள் இருந்திருக்கிறார்கள்.
அந்த சமயம் எல்லாம் தொடர்ச்சியாக இவருடைய காமெடிகளை வைத்தே பல படங்கள் அந்த சமயம் வெற்றியை பெற்றது என்றே சொல்லலாம். இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் ஆரம்ப காலத்திலே தொடர்ச்சியாக குவிந்தது. ஒரு நாளிலே அவர் 4 படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து 3 மணி நேரத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு படங்களிலும் நடித்து கொடுத்து இருக்கிறார்.
அந்த மாதிரி சமயத்தில் கவுண்டமணி ரஜினியைவே சம்பளத்தில் மிஞ்சிவிட்டாராம். ரஜினிகாந்த் ஒரு படத்திற்கு சேர்த்து மொத்தமாக சம்பளம் வாங்குவார். ஆனால் கவுண்டமணி அப்படி இல்லை ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அந்த படத்தில் ஒரு நாளில் எத்தனை மணி நேரம் நடிக்கிறாரா அத்தனை மணி நேரத்திற்கு சேர்த்து சம்பளம் வாங்குவாராம்.
அப்படி கணக்கு பார்த்தால் கூட கவுண்டமணி அந்த சமயம் எல்லாம் பல படங்களில் நடித்து கொண்டு இருந்தார். எனவே, ரஜினிகாந்த்தையே சம்பளத்தில் மிஞ்சுவிட்டாராம். இந்த தகவலை பிரபல சினிமா விமர்சகரான செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் கவுண்டமணி தற்போது ஒத்த ஒட்டு முத்தையா என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 போட்டிகள் மற்றும்…
கொல்கத்தா : இந்திய தேசிய கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட…
ஜல்கான்: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த…
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவை மீண்டும் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நாளை…
சென்னை: நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி…
கொல்கத்தா: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்,…