சினிமாவில் எங்கு திரும்பி பார்த்தாலும் தற்போது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் பெயர் தான் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படத்தில் காலித் ரஹ்மான், கணபதி எஸ் பொதுவால், ஸ்ரீநாத் பாசி காலித் ரஹ்மான், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படம் தமிழகத்திலும் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான நாளில் இருந்து இதுவரை உலகம் முழுவதும் 80 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூலை கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் வெளியான சமயத்தில் இருந்து தற்போது வரை தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் படத்தின் இயக்குனர் சிதம்பரத்தை நேரில் அழைத்து பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக கமல்ஹாசன்,விக்ரம், ஆகியோர் நேரில் அழைத்து பாராட்டி இருந்தார்கள். அந்த வகையில், சமீபத்தில் படத்தின் இயக்குனர் சிதம்பரத்தை தனுஷ் நேரில் அழைத்து பாராட்டி இருந்தார்.
இந்த நிலையில், தற்போது தனுஷ் அவருடைய இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. தனுஷின் 54-வது திரைப்படத்தை ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் இயக்குனர் சிதம்பரம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனுஷ் தற்போது ராயன் திரைப்படத்தினை இயக்கி நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அந்த திரைப்படத்தினை தொடர்ந்து தனுஷ் அடுத்ததாக இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 51-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…