கேப்டன் மில்லர் வசூல் எவ்வளவு தெரியுமா?

தனுஷ் நடிப்பில் இயக்குனர் அருண்மாதேஷ் வரன் இயக்கத்தில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கேப்டன் மில்லர். பிரியங்கா மகான், சிவ ராஜ்குமார், நிவேதிதா சதி, எட்வர்ட் சொன்னன்பாலிக், சுந்தீப் கிஷன், நாசர், ஜான் கோக்கன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
டூப் இல்லாமல் மாடுபிடி வீரராக நடிக்க ஆசை! அருண் விஜய் பேச்சு!
இந்த திரைப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. ஆக்சன் கலந்த அதிரடி படமாக இந்த படம் உருவாக்கபட்டுள்ள காரணத்தால் ஆக்சன் பிரியர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
கேப்டன் மில்லர் வசூல்
இந்நிலையில், கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போதுவரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியான 7 நாட்களில் 60 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, படம் 50 கோடி வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் இந்த திரைப்படம் இதுவரை ரூ.2.79 கோடி வசூல் செய்துள்ளது. படத்தின் பட்ஜெட் 50 லிருந்து 60 கோடி தான். படத்தினுடைய பட்ஜெட்டை வெளியான சில நாட்களிலே அதன் வசூலில் படம் எடுத்துள்ளதால் படத்தின் தயாரிப்பாளர் மிகவும் உற்சாகத்தில் உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025