ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் ஹீரோவை இறக்கும் லோகேஷ்! இங்க ஆள் கிடைக்கல போல..

Thalaivar 171 : தலைவர் 171 திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் ரன்பீர் சிங் நடிக்கவுள்ளதாக தகவல்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கனகராஜ் லியோ படத்தினை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்துடய ‘தலைவர் 171’ திரைப்படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். ரஜினி தற்போது வேட்டையன் படத்தில் பிஸியாக இருப்பதன் காரணமாக இன்னும் தலைவர் 171 படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருக்கிறது.
ரஜினி வேட்டையன் படத்தில் நடித்து முடித்த பின் தலைவர் 171 படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையில், இந்த படத்தில் ரஜினிகாந்துடன் நடிக்க வைக்க எந்தெந்த பிரபலங்களை தேர்வு செய்யலாம் என்கிற பேச்சுவார்த்தையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்படும் நடிகர்கள் குறித்த தகவல்கள் தான் அவ்வப்போது வெளியாகி கொண்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க வைக்க பிரபல நடிகரான லாரன்ஸ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதைப்போல வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், தற்போது இதையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு ஒரு தகவல் கிடைத்து இருக்கிறது. அது என்னவென்றால், இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க வைக்க பாலிவுட் நடிகர் ரன்பீர் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். ரன்பீர் சிங் ரஜினியின் தீவிர ரசிகர் எனவே. கண்டிப்பாக அவர் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தான் தெரிவிப்பார் எனவும் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது.
இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவில் ஆள் கிடைக்கவில்லையா லோகி என கேள்வி எழுப்பி வருகிறார்கள். உண்மையில் அவர் நடிக்கிறார் என்றால் கண்டிப்பாக படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த தலைவர் 171 படத்திற்கான தலைப்புடன் கூடிய டீசர் வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்க்கது.