மீண்டும் ஹிட் பட இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கும் அஜித்?
நடிகர் அஜித் பொதுவாகவே ஒரு திரைப்படத்தில் இயக்குனருடன் பணியாற்றுகிறார் என்றால் அந்த இயக்குனர் தனக்கு பிடித்து விட்டாலோ அல்லது இயக்குனர் கூறும் கதைகளும் தனக்கு பிடித்து விட்டால் அடுத்தடுத்த படங்களில் அவர்களை வைத்து இயக்க வாய்ப்பு கொடுப்பதுண்டு. அந்த வகையில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அஜித்தை வைத்து வீரம் படத்தை இயக்கியவர இயக்குனர் சிறுத்தை சிவா.
சிறுத்தை சிவாவுக்கு வீரம் படத்தை இயக்கி முடித்த பிறகு வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பை அஜித் கொடுத்தார். அதேபோல அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத்திற்கு வலிமை, துணிவு என தொடர்ச்சியாக பட வாய்ப்புகளை கொடுத்தார். இப்படி தொடர்ச்சியாக ஏற்கனவே பணியாற்றிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவரும் அஜித் தற்போது மீண்டும் இயக்குனர் எச். வினோத்திற்கு பட வாய்ப்பு ஒன்றை கொடுத்து திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சைலண்டாக நடைபெறப்போகும் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம்! வருகை தருவாரா அஜித்?
இயக்குனர் எச்.வினோத் கடைசியாக அஜித்தை வைத்து துணிவு படத்தை இயக்கியிருந்தார். துணிவு படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்குனர் கமல்ஹாசன வைத்து ஒரு படத்தை இயக்கி கமிட்டாகி உள்ளார். இதற்கிடையில் தற்போது கமல்ஹாசன் பிஸியாக இருப்பதால் இயக்குனர் வினோத் தீரன் அதிகாரம் இரண்டாவது பாகத்திற்கான கதையை கிட்டத்தட்ட எழுதி முடித்து விட்டாராம்.
கதையை எழுதி முடித்துவிட்டு அதற்கான பவுண்டட் ஸ்கிரிப்டையும் கார்த்தியிடம் கொடுத்துவிட்டாராம். அதனை தொடர்ந்து அவர் நடிகர் அஜித்தையும் சந்தித்து ஒரு ஒன்லைன் ஒன்றையும் கூறியிருக்கிறாராம். எச்.வினோத் சொன்ன அந்த ஒன்லைன் அஜித்திற்கு ரொம்பவே பிடித்திருக்கிறது என்ற காரணத்தால் படத்தை இயக்கும் வாய்ப்பையும் கொடுத்துவிட்டாராம். விரைவில் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 62-வது திரைப்படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள தன்னுடைய 63-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.