நான் இப்போ ஒரே பிஸி! பாலிவுட் பக்கம் செல்லும் குந்தவை த்ரிஷா!
ஒரு பக்கம் சர்ச்சை மற்றோரு பக்கம் பட வாய்ப்புகள் என த்ரிஷா கடந்த சில நாட்களாகவே தலைப்பு செய்தியில் இடம்பிடித்து வருகிறார். சர்ச்சை என்றால் அவரை பற்றி மன்சூர் அலிகான் பேசிய விவகாரம் தான். மற்றோர் விஷயம் பட வாய்ப்புகள். அதன்படி, கடைசியாக த்ரிஷா லியோ படத்தில் நடித்திருந்த நிலையில், அந்த படம் அவருக்கு வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்ததாக தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார்.
தமிழை தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தியில் த்ரிஷாவுக்கு பட வாப்புகள் வந்துகொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ஒரு திரைபடத்தில் நடிக்க வைக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படவுள்ள அந்த திரைப்படத்தினை பிரபல இயக்குனரான திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறாராம்.
ஒரு பக்கம் சர்ச்சை…மறுபக்கம் ரூ.300 கோடி! த்ரிஷாவுக்கு அடித்த ஜாக்பாட்…
எனவே, இந்த தெலுங்கு திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்க வைக்க த்ரிஷாவிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனை தவிர்த்து ஹிந்தி திரைப்படம் எதுவென்றால், சல்மான் கான் புதிதாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம். அந்த படத்தில் தான் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க வைக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
அந்த படத்தினுடைய கதையை கேட்டவுடன் த்ரிஷாவுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். எனவே, சல்மான் கானுக்கு ஜோடியாக அவர் ஹிந்தி திரைப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம். இந்த பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்து அவர் படத்தில் நடிப்பது உறுதியாகிவிட்டது என்றால், தமிழை போல அவர் கண்டிப்பாக பாலிவுட்டிலும் கலக்குவார்.
மேலும், நடிகை த்ரிஷா தற்போது தமிழில் லியோ பட வெற்றிக்கு பிறகு அஜித்திற்கு ஜோடியாக விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அதைப்போல, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள ‘தக்லைஃப்’ படத்திலும் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.