தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருப்பவர் நயன்தாரா தான். இவர் தான் நடிக்கும் படங்களில் சம்பளமாக 10 கோடி வரை வாங்கி வருவதாக கூறப்பட்டது. கடைசியாக இவர் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்ததற்கு கூட அவர் சம்பளமாக 10 கோடி வரை வாங்கியதாக கூறப்பட்டது.
இப்படி ஒரு படத்திற்கு நடிக்கவே 10 கோடி சம்பளம் வாங்கி வரும் நயன்தாரா தான் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருகிறார். ஆனால், தற்போது அவரையே நடிகை திரிஷா மிஞ்சி இருக்கிறாம். த்ரிஷா கடைசியாக லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடித்ததற்கு முன்பு வரை அவர் சம்பளமாக 3 கோடி வாங்கி வந்தார்.
சம்பளத்தை சரியாக கொடுக்காத தயாரிப்பாளர்! கடுப்பாகி மெகா ஹிட் படத்தில் இருந்து விலகிய நயன்தாரா?
குறிப்பாக பொன்னியின் செல்வன் 1 படத்திற்காக 2 கோடியும், பொன்னியின் செல்வன் 2 படத்திற்காக 3 கோடியும் சம்பளம் வாங்கினாராம். அதன் பின், லியோ படத்தில் நடிக்கும்போது தனது சம்பளத்தை 2 கோடிகள் உயர்த்தி 5 கோடி வாங்கினாராம். லியோ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்து இருக்கும் நிலையில், தற்போது நடிகை த்ரிஷா தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இருக்கிறாராம். கிட்டத்தட்ட லியோ படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக நடிக்கும் படங்களில் சம்பளமாக 10 கோடிகளுக்கு மேல் கேட்கிறாராம்.
அடடா! தொழில் பக்தினா இது தான்…கோலிவுட்டை வியக்க வைத்த விஜய், த்ரிஷா!
இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும் த்ரிஷா தான் நடிக்கும் படங்களுக்கு சம்பளமாக 10 கோடிகளுக்கு மேல் வாங்கி வருவதாக தகவல்கள் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்த நாயன்தாராவை தற்போது த்ரிஷா பின்னுக்கு தள்ளியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், நடிகை த்ரிஷா தற்போது அஜித்திற்கு ஜோடியாக விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் ‘தக்லைஃப் ‘ திரைப்படத்திலும் நடிக்க த்ரிஷாகமிட் ஆகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிட்னி : பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…
சென்னை: அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர்…
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் இப்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள்…
சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என 2 ஆண்டுகளுக்கு மேல்…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக…