நடிகை நயன்தாரா தொடர்ச்சியாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இப்போது இருக்கும் இளம் நடிகைகள் பலரும் நயன்தாராவை பார்த்து தான் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களில் நடித்து வருகிறார்கள்.
குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷ், வாணி போஜன் போன்ற நடிகைகள் எல்லாம் நயன்தாராவையே பார்த்து தான் இப்படி பட்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை நயன்தாரா, தற்போது மண்ணாங்கட்டி, அன்னபூரணி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.
எப்போதும் இப்படியான பெண்களுக்கு முக்கிய துவம் இருக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா கடைசியாக ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் கமர்ஷியல் படம் எனவே, அந்த படத்தை தொடர்ந்து மண்ணாங்கட்டி, அன்னபூரணி ஆகிய படங்களில் நடிப்பதன் மூலம் மீண்டும் பழைய பார்முலாவுக்கு திரும்பி இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை எல்லாம் யாரும் மதிக்க கூட மாட்டிக்காங்க! யாஷிகா ஆனந்த் பேச்சு!
இந்நிலையில், ஏற்கனவே, மண்ணாங்கட்டி, அன்னபூரணி என பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் படங்களில் நடிகை நயன்தாரா நடித்து வரும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ள படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம். அந்த திரைப்படத்தினை கானா படத்தை இயக்கிய இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்குகிறாராம்.
அருண் ராஜா காமராஜ் கடைசியாக லேபிள் எனும் வெப் தொடர் ஒன்றை இயக்கி இருந்தார். இந்த வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நயன்தாராவை சமீபத்தில் சந்தித்து கதை ஒன்றை அருண் ராஜா காமராஜ் தெரிவித்துள்ளாராம். அந்த கதையும் அவருக்கு மிகவும் பிடித்து போக நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டாராம்.
தற்போது அந்த படத்திற்கான வேளைகளில் தான் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் பிசியாக இருக்கிறாராம். நயன்தாராவும் தான் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு முடிந்த பின் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிப்பாராம். விரைவில் இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…