மும்பையைச் சேர்ந்த நடிகை மிருணாள் தாக்கூர் வெள்ளித்திரையில் நடிக்க வருவதற்கு முன்பு சின்னத்திரையில் ஒரு தொடர் நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பாலிவுட்டில் லவ் சோனியா, சூப்பர் 30. பாட்லா ஹவுஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால், அவருக்கு இந்த படங்களின் மூலம் எல்லாம் பெரிய அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
பின், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக சீதா ராமம் திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் தான் இவருடைய வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது என்றே கூறலாம். இந்த திரைப்படத்தின் மூலம் அவர் மிகவும் பிரபலமாகிவிட்டார். கடைசியாக அவர் நானிக்கு ஜோடியாக ‘ஹாய் நன்னா’ படத்தில் நடித்திருந்தார்.
‘ஆரம்பிக்கலாமா’! கங்குவா படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய சூர்யா!
அதனை தொடர்ந்து மிருணாள் தாக்கூர் தற்போது விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‘பேம்லி ஸ்டார்’ படத்தில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் பாலிவுட்டில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் தற்போது மும்பையில் விலை உயர்ந்த பிளாட் ஒன்றை வாங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நன்றாக சம்பாதித்து கொண்டு இருக்கிறோம். அந்த பணங்களை வைத்து மும்பை அந்தேரி பகுதியில் புதிய பிளாட் ஒன்றை மிருணாள் தாக்கூர் வாங்கி இருக்கிறாராம். முன்னதாக இது நாயகி கங்கனா ரணாவத்தின் அப்பா-சகோதரர் வாங்கி இருந்தாராம். அவரிடம் இருந்து தற்போது மிருணாள் தாக்கூர் வாங்கி இருக்கிறாராம். அவர் புதிதாக வாங்கி இருக்கும் அந்த பிளாட்டின் விலை ரூ.10 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் இது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…