நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘தளபதி 68’ . இது நடிகர் விஜயின் 68-வது திரைப்படம் என்பதால் படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 68’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் பிரசன்னா, பிரபுதேவா, லைலா, ஸ்னேகா, வைபவ், பிரேம் ஜி, மோகன், மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கான பூஜை வீடியோ வெளியாகும் போதே படத்தில் நடிக்கும் பிரபலங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகிவிட்டது. இருந்தாலும் இன்னும் சில பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து வருகிறார்கள்.
மீண்டும் கழுகு பெயரை பயன்படுத்தி விஜய்யை சீண்டிய ரஜினிகாந்த்.!
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இந்த திரைபடத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பாடகர் யுகேந்திரன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. அந்த தகவலை தொடர்ந்து தற்போது கிடைத்து இருக்க கூடிய தகவல் என்னவென்றால், தளபதி 68 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல இளம் நடிகையான மாளவிகா சர்மா இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர் இதற்கு முன்பு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் நெலா டிக்கெட், ரெட், ஹரோம் ஹரா உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவருக்கு தற்போது தளபதி 68 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…