சினிமா துறையில் இப்போதெல்லாம் நடிகைகளுக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் கூட அந்த நடிகைகள் தான் நடிக்கும் படங்களுக்கு சம்பளமாக கோடிகள் வாங்குவது சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். அப்படி தான் நடிகை ஜான்வி கபூர். ஜான்வி கபூர் ஹிந்தியிலும் சரி மற்ற மொழிகளிலும் சரி பெரிய அளவிற்கு படங்களை நடிக்கவில்லை.
சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியீட்டதன் காரணமாக தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறார். இதன் காரணமாக தான் அவருக்கு பட வாய்ப்புகளும் தற்போது வந்துகொண்டு இருக்கிறது. அந்த வகையில், அவர் அடுத்ததாக ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்க ஒரு படத்தில் கமிட் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
3 முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன்! பாடகி பிரியங்கா சிங் பகீர் தகவல்!
அந்த திரைப்படத்தினை ‘உப்பென’ புகழ் புச்சி பாப சனா இயக்கவுள்ளதாகவும், படத்தினை சுகுமார் ரைட்டிங்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்கவுள்ளார்கள் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் நடிக்க தான் நடிகை ஜான்வி கபூர் கோடிகளில் சம்பளம் கேட்டுள்ளாராம்.
படத்தில் நடிக்க வைக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தபோது படத்தில் நடிக்க தனக்கு 3 கோடி சம்பளம் வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறாராம். இந்த படத்தில் ஜான்வி கபூர் ராம் சரணுக்கு ஜோடியாக சரியாக இருப்பார் என்பதால் படத்தில் நடிக்க வைக்க அவர் கேட்ட சம்பளத்தையே படக்குழு கொடுக்க முடிவு செய்துவிட்டதால். தெலுங்கில் இருக்கும் பெரிய நடிகைகள் வாங்கும் சம்பளத்தை ஜான்வி கபூர் வாங்குகிறார். ஆனால், ஜான்வி கபூர் ஹிந்தியில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து இருக்கிறார். பெரிய அளவில் தெலுங்கில் எல்லாம் நடித்தது இல்லை. இருப்பினும் ஜான்வி கபூருக்கு டிமாண்ட் அதிகமாக இருப்பது திரைத்துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…