பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. இவர் சமீபகாலமாக ஒரு பக்கம் கமர்ஷியல் படங்களில் நடித்துக் கொண்டே, மறுபுறம் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்துகொண்டு வருகிறார்.இவர் கடந்த ஆண்டு ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த பதான் மற்றும் ஜவான் ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
அதனை தொடர்ந்து இவர் சமீபத்தில் ஃபைட்டர் படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக ‘கல்கி 2898 கி.பி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்து வருகிறார். அறிவியல் எதிர்காலம் சார்ந்த கதையை வைத்து இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.
டாப் ஹீரோவை வைத்து 400 கோடியில் படம்! பாலிவுட்டுக்கு பறக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!
இந்த திரைப்படத்தினை நாக் அஸ்வின் இயக்குகிறார். தீபிகாவுடன் கமல்ஹாசன், அமிதாப் பச்சன். திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரூ.600 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதற்கிடையில் இந்த படத்தில் நடிக்க தீபிகா பெரும் சம்பளம் கேட்டுள்ள தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, இந்த படத்தில் நடிக்க தீபிகா படுகோனே ரூ.20 கோடி சம்பளம் கேட்டுள்ளார். அவர் கேட்டுள்ள சம்பளத்தையும், தருவதாக படக்குழுவினர் கூறியதாக சினிமா வட்டாரத்தில் செய்திகள் வெளியாகி இருக்கிறது. தீபிகா படுகோனே கேரியரில் இதுவே அதிக சம்பளம் என்று கூட கூறலாம். முன்பு ஒவ்வொரு படத்திற்கும் ரூ. 12-15 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த நிலையில், இந்தப் படத்துக்கு அதிக கால்ஷீட் ஒதுக்க வேண்டியிருந்ததால் ரூ.20 கோடி கேட்டாராம்.
தீபிகா முக்கிய வேடம் என்பதால் தயாரிப்பாளர்களும் தீபிகா படுகோனே கோரிக்கைக்கு சம்மதித்துள்ளதாகவும் அவர் கேட்ட சம்பளத்தையும் கொடுத்துள்ளதாகவும் பாலிவுட்டில் பேசப்படுகிறது. வைஜெயந்தி மூவிஸ் பேனரில் சி.அஷ்வினிதத் தயாரித்துள்ள ‘கல்கி 2898 கி.பி’ திரைப்படம் மே 9ஆம் தேதி வெளியாகிறது.
பாகிஸ்தான் : 2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. எனவே, எந்த நாட்டில்…
மும்பை : சைஃப் அலிகான் நேற்று லீலாவதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சைஃப் தற்போது நலமாக உள்ளார். கடந்த…
சென்னை: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று (ஜன.22ம் தேதி)…
போலு : துருக்கி ஹோட்டலில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 76ஆக அதிகரித்துள்ளது. இஸ்தான்புல்லுக்கு கிழக்கே சுமார்…
சென்னை : பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசிய நிலையில்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' திரைப்பட இயக்குநர் சுகுமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஹைதராபாத் ஏர்போர்ட்டில் இருந்து சுகுமாரை…