நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு இயக்குனர் சுதாகொங்கரா இயக்கத்தில் தன்னுடைய 43 வது படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்கப்படவும் உள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள். படத்திற்கான அறிவிப்பும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், தற்போது இந்த திரைப்படத்தில் இருந்து நடிகை நஸ்ரியா விலகி உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது . அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் நடிக்க பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி சங்கரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சமந்தா வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஏற்கனவே அதிதி ஷங்கர் சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்திருந்தார். பல பேட்டிகளிலும் அதிதி ஷங்கர் தான் சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை என்றும் கூறியிருந்தார். எனவே, தற்போது அவர் சூர்யா 43 படத்தில் நடிக்கவுள்ளதாக பரவும் தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உண்மையில் சூர்யா 43 படத்தில் அதிதி ஷங்கர் நடிக்கிறாரா அல்லது இந்த தகவல் வெறும் வதந்திதானா அப்படி இல்லை என்றால் நஸ்ரியா உடன் அதிதி ஷங்கர் சூர்யா 43 படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிய வந்தால் மட்டுமே தெரிய வரும்.
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…