இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஸ்ணு விஷால், விக்ராந்த், ரஜினிகாந்த் என பலருடைய நடிப்பில் வெளியான திரைப்படம் ‘லால்சலாம்’. இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது.
படம் மக்களுக்கு மத்தியில் சுமாரான வெற்றியை பெற்று விமர்சனத்தையும் பெற்று வருகிறது. வசூல் ரீதியாக இந்த திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை 12 கோடிகள் வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்து இருக்கிறது.
அவதூறு பேச்சு… அருவருப்பாக இருக்கு! நடிகை த்ரிஷா ஆவேசம்!!
இந்நிலையில் லால் சலாம் திரைப்படம் தோல்வியடைந்துள்ள நிலையில் விஷ்ணு விஷால் மிகவும் சோகத்தில் இருக்கிறாராம் . ஏனென்றால் லால் சலாம் திரைப்படத்தின் மூலம் தனது மார்க்கெட் சரிந்து விட்டதாகவும் படத்தின் படப்பிடிப்பிற்காக நாள் ஒதுக்கியது எல்லாம் வேஸ்ட் ஆகிவிட்டதாகவும் புலம்பி கொண்டிருக்கிறாராம். படத்திற்காக அவர் பல நாட்கள் கால்ஷீட் கொடுத்ததால் வேதனையில் இருக்கிறாராம் . இந்த தகவலை யூடியூப் சேனல் ஆன வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.
இதனைப்போலவே கடந்த சில நாட்களுக்கு முன்பு லால் சலாம் திரைப்படம் கொடுத்த குஷியில் நடிகர் விஷ்ணு விஷால் தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. அதன்படி, அவர் இனிமேல் அவர் தான் நடிக்கும் படங்களுக்கு சம்பளமாக 7 கோடி வரை வாங்கவுள்ளதாகவும், தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…
சென்னை: தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…