முருகதாஸ்-விஜய் படத்தின் கதை அது கிடையாதாம்- வெளியான தகவல்
நடிகர் விஜய்-முருகதாஸ் படத்தின் வேலைகள் சென்னையில் நடந்து வந்தது. தற்போது தமிழ் சினிமாவில் அறிவிக்கப்பட்ட முழு ஸ்ட்ரைக்கால் படப்பிடிப்பு எல்லாம் பாதியில் நிற்கின்றன.
இதற்கு நடுவில் இப்படத்தின் கதை விவசாயத்தை பற்றியும், கத்தி படத்துடன் தொடர்புடையது என்றும் சமீப நாட்களாக செய்திகள் வருகின்றன. உண்மையில் விஜய்யின் 62வது படம் விவசாயம் பற்றிய கதை இல்லையாம், அதோடு கத்தி, துப்பாக்கி இரண்டு படத்திற்கு இந்த படத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.
விவசாயம் போன்ற கதைக்களம் இல்லை என்றால் எப்படிபட்ட கதையாக இப்படம் அமைந்திருக்கும் என்று ரசிகர்கள் நிறைய யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்.