“விமர்சனங்களை புறக்கணிப்பது எங்கள் நோக்கம் இல்லை” – தயாரிப்பாளர் சங்கம் விளக்கம்!

சினிமா விமர்சனங்களுக்கு தடை கோரி நீதிமன்றம் சென்றது ஏன்? என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Movie Reviewer

சென்னை: திரைப்பட விமர்சனங்கள் என்கிற பெயரில் தனிமனித தாக்குதல் மற்றும் வன்மத்தை விதைக்கும் ஊடகங்களை கண்டிப்பதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியது. நடப்பாண்டில் வெளியான இந்தியன் 2, வேட்டையன், கங்குவா படங்கள், பொதுமக்கள் விமர்சனங்களால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன என தயாரிப்பாளர் சங்கம் கவலை தெரிவித்தது.

இதனால், திரையரங்கு வளாகம் மட்டுமில்ல, அதற்கு அருகிலும், எந்த YouTube Channel-களும் பார்வையாளர்கள், ரசிகர்களிடம் இனிமேல் புதிய திரைப்படங்களை பற்றி பேட்டி எடுக்க தமிழ் நாட்டில் உள்ள அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் அனுமதிக்க கூடாது என கூறி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு விசாரணையில், திரையரங்குகளில் வெளியான மூன்று நாட்களுக்குள் தனிநபர்கள் அல்லது சமூக ஊடக சேனல்கள் திரைப்படங்களை விமர்சனம் செய்வதைத் தடுக்க இடைக்கால உத்தரவை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்நிலையில், இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக, தற்பொழுது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம். அந்த அறிக்கையில், ‘சமீப காலங்களில் சில ஊடகங்கள் வன்மத்துடன் சில படங்களுக்கு எதிராக விமர்சனம் செய்து வருவதையும், தனிமனித தாக்குதல் செய்து வருவதையும் தடுக்கவே தவிர, ஒட்டுமொத்தமாக அனைத்து ஊடகங்களுக்கும் எதிரானது அல்ல.

அப்படிப்பட்ட சிலரை மட்டுமே தடுக்க முடியாத காரணத்தினால் தான் இந்த முடிவு. தயாரிப்பாளர்கள் பரிந்துரைக்கும் பத்திரிகை, யூ-டியூப் சேனல்கள், சோசியல் மீடியா Influencer-கள், Press Show- திரைப்படங்களை பார்த்து, விமர்சனங்களை வெளியிடுவதில், எந்த எதிர்ப்பும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்