இந்த காரணத்திற்காக தான் நீங்கள் தளபதி…விஜய்க்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான்.!
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தற்போது ‘பதான்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜனவரி 25-ஆம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான டிரைலர் இன்று மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டது.
இதுவரை மற்ற படங்களின் டிரைலரை வெளியிடாத தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் முதன் முறையாக ஷாருக்கானுடன் இருக்கும் நட்புக்காக பதான் படத்தின் தமிழ் ட்ரைலரை தனது ட்வீட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டிருந்தார்.
அதற்கு நன்றி தெரிவித்த நடிகர் ஷாருக்கான் ட்வீட்டர் பக்கத்தில் ” நன்றி என் நண்பா விஜய். இந்த தாழ்மையான காரணத்திற்காக நீங்கள் தளபதி, விரைவில் சுவையான விருந்துக்கு சந்திப்போம். மிக்க நன்றி நண்பா” என பதிவிட்டுள்ளார்.
அவர் விருந்து என குறிப்பிட்டது, பல முறை இருவரும் மாற்றி மாற்றி விருந்து வைத்து சாப்பிட்டுள்ளார்கள். எனவே விரைவில் சுவையான விருந்துக்கு சந்திப்போம் என குறிப்பிட்டுள்ளார். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்திலும் விஜய் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.