இந்த காரணத்துக்காக தான் அப்படி நடிக்க விரும்புகிறேன்…மனம் திறந்த நடிகை சாய் பல்லவி.!
நடிகை சாய் பல்லவி சமீபத்திய பேட்டியில், சினிமாத்துறையில் நுழைவதற்கு முன்பு, தனது உடல் தோற்றத்தைப் பற்றி மிகவும் கவலைப்பட்டதாக தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர் ” என் குரல் தோற்றம், முகப்பரு அனைத்தும் என் நம்பிக்கையை பறித்தது. இவை அனைத்தும் மக்களுடன் பழகுவதில் என்னைத் தடுத்து நிறுத்தியது.
என்னுடைய முதல் படமான பிரேமம் தான். இந்த படம் வெளியான பிறகுதான், பார்வையாளர்கள் ஒரு படத்தில் ஒரு நடிகையின் கதாபாத்திரத்திற்கும் அவர்களின் தோற்றத்தை விட நடிப்புத் திறமைக்கும் முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டார்கள்.
பிரேமம் படத்தில் சுத்தமாக மேக்கப் இல்லாமல் தான் நடித்தேன். அது பார்வையாளர்களுக்கு பிடித்து போக அதை ரசித்தனர். எனவே அது எனது நம்பிக்கையை அதிகரித்தது. அதனால்தான் மேக்கப் இல்லாமல் நடிக்க விரும்புகிறேன். இயக்குனர்கள் கூட இந்த விஷயத்தில் என்னை வற்புறுத்தவில்லை” என கூறியுள்ளார்.
மேலும் நடிகை சாய் பல்லவி தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரிய சாமி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.