நடிகர் சித்தார்த் நடிப்பில் இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘சித்தா’. இந்த திரைப்படத்தில் சித்தார்துக்கு ஜோடியாக நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைந்திருந்தார்.
சித்தப்பாவின் உணர்வுபூர்வமான பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி வெளியீட்டு இருந்தது. படம் வசூல் ரீதியாக உலகம் முழுவதும் 16 கோடி வசூல் செய்தது. படத்தை பார்த்து எமோஷனலாகதவர்கள் யாருமே இருக்கவே முடியாது என்றே சொல்லவேண்டும்.
இந்த நிலையில், திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன இந்த திரைப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அந்த வகையில், முன்னதாக இந்த ‘சித்தா’ திரைப்படம் நவம்பர் 17-ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருந்தது.
காலில் விழுந்ததால் தான் கமலுக்கு பிக்பாஸ் வாய்ப்பு! சர்ச்சையை கிளப்பிய பாடகி சுசித்ரா!
இதனால் படத்தை ஓடிடியில் பார்க்கலாம் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்தும் இருந்தார்கள். ஆனால், சில காரணங்களால் ‘சித்தா’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்கள். இதனையடுத்து, படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, ‘சித்தா’ திரைப்படம் வரும் நவம்பர் 28-ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மேலும், ‘சித்தா’ படத்தை தொடர்ந்து அடுத்ததாக சித்தார்த் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…