அது மஞ்சு வாரியர் இல்ல! ரொமாண்டிக் போஸ்டரால் பதறிய ரசிகர்கள்!

Manju Warrier

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருப்பவர் நடிகை மஞ்சு வாரியர். இவர் தமிழ் சினிமாவில் அசுரன், துணிவு ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். தமிழ் சினிமாவிலும் சரி மலையாள சினிமாவிலும் சரி தன்னுடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும் வகையில் கிடைக்கும் கதாபாத்திரங்களை மட்டுமே  மஞ்சு வாரியர் தேர்வு செய்து நடித்து வருகிறார் என்றே சொல்லலாம்.

இந்த நிலையில், அடுத்ததாக நடிகை மஞ்சு வாரியார் மலையாளத்தில் இயக்குனர் சைஜு ஸ்ரீதரன் இயக்கும் ‘ஃபுட்டேஜ்’ என்ற திரைப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் காயத்ரி அசோக் மற்றும் விஷக் நாயர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்கள். படத்தின் படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.

இதற்கிடையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரில் இருவர் கட்டியனைத்து கொண்டு ரொமாண்டிக்காக இருப்பது போல புகைப்படம் இடம்பெற்று இருந்தது. இதனை பார்த்த பலரும் அதில் இருப்பது மஞ்சு வாரியர் தான் என கூற தொடங்கி அதிர்ச்சியாகி விட்டார்கள்.

3 முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன்! பாடகி பிரியங்கா சிங் பகீர் தகவல்!

மேலும் சிலர் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் இந்த மாதிரி நடிக்க தொடங்கிவிட்டார் போல எனவும் விமர்சிக்கவுக்கும் தொடங்கிவிட்டார்கள். ஆனால், அந்த போஸ்டரில் இருப்பது  மஞ்சு வாரியர் இல்லை. படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் காயத்ரி அசோக் தான். இவரை பார்த்துவிட்டு தான் பலரும் அது மஞ்சு வாரியர் என தவறாக கூறி வருகிறார்கள்.

மஞ்சு வாரியர் தற்போது தமிழில் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து mrx எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்