சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான 80ஸ் பில்டப் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்று இருந்த நிலையில், அவர் கம்பேக் கொடுக்கவேண்டிய சூழ்நிலையில் இருந்தார். அவருக்கு வடக்குப்பட்டி ராமசாமி படம் ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம். இந்த திரைப்படத்தினை இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி, பக்கோடா பாண்டி, ரவி மரியா, உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2-ஆம் தேதி வெளியானது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. நாளுக்கு நாள் படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பின் காரணமாக படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வருகிறார்கள்.
வயிறு குலுங்க சிரிக்க வடக்குப்பட்டி ராமசாமி படத்துக்கு போங்க! ட்விட்டர் விமர்சனம் இதோ!
பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதால் படத்தின் வசூலும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை எவ்வளவு கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 3.7 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…