இளையராஜாவின் பயோபிக் படம் எடுக்க 2 இயக்குனர்களை தேர்வு செய்த தனுஷ்?
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்கை வரலாறு திரைப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. அவருடைய வாழ்கை வரலாற்று திரைப்படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்தது. அதைப்போல, படத்தை பிரபல இயக்குனரான பால்கி இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
read more- ரொம்ப கஷ்டமான விஷயம்! அதிர்ச்சியுடன் ‘GOAT’ படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட வெங்கட் பிரபு!
ஆனால், தற்போது கிடைத்திருக்கும் தகவல் என்னவென்றால், இளையராஜாவின் வாழ்கை வரலாற்று திரைப்படத்தை இயக்குனர் பால்கி இயக்கவில்லையாம். யார் இயக்கவேண்டும் என்பதற்கான முடிவை தனுஷ் தான் எடுக்கவுள்ளாராம். இந்த திரைப்படத்தினை தனுஷே தனது சொந்த செலவிலும் தயாரிக்க முடிவு எடுத்துவிட்டாராம்.
எனவே, படத்தை அவரே தயாரிப்பதால் தனக்கு பிடித்த இயக்குனர்களை தேர்வு செய்து இளையராஜாவிடம் அனுப்பி கொண்டு இருக்கிறாராம். அப்படி தான் இதுவரை இயக்குனர் மாரிசெல்வராஜ் மற்றும் அருண் மாதேஷ்வரன் ஆகியோரை அனுப்பினாராம். அவர்கள் இருவருமே இளையராஜாவிடம் அமர்ந்து பேசவும் செய்தார்களாம்.
read more – பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டேவுக்கு வந்த கனவு! ரொம்ப பெருசா இருக்கே!
ஆனால், இவர்களில் யார் என்பதை இளையராஜா இன்னும் முடிவு செய்து தனுஷிடம் கூறவில்லையாம். இளையராஜா மிகவும் யோசித்து கொண்டு இருக்கிறாராம். இந்த தகவலை வலைப்பேச்சு தெரிவித்துள்ளது. விரைவில் படத்தை எந்த இயக்குனர் இயக்கப்போகிறார் என்ற அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நடிகர் தனுஷ் ஏற்கனவே, இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற திரைப்படத்திலும், இயக்குனர் அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் நடித்து இருக்கிறார். இந்த இரண்டு இயக்குனர்களும் தனுஷுடன் ஏற்கனவே பணியாற்றி இருப்பதால் இளையராஜாவின் பயோபிக் படத்தை எடுக்கலாம் என்று தனுஷ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.