மக்களே பிரேமலு படம் ஓடிடிக்கு வருது! எப்போது தெரியுமா?

Premalu OTT

Premalu OTT மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளியான பிரேமலு திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் கிரீஷ் ஏ.டி. எழுதி இயக்கிய இந்த திரைப்படத்தில் மீனாட்சி ரவீந்திரன், அல்தாஃப் சலீம், மமிதா பைஜு, மேத்யூ தாமஸ் , அகிலா பார்கவன், சங்கீத் பிரதாப், ஷியாம் மோகன் எம், ஆகியோருடன் நஸ்லென் கே கஃபூர் மற்றும் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.

READ MORE –மொத்தம் 4 மணி நேரம் ரெக்கார்டிங்! யுவனால் நொந்துபோன தளபதி விஜய்?

இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியானது. இந்த படம் மிகவும் அருமையாக இருந்த காரணத்தால் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இன்னுமே பல திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடி கொண்டும் இருக்கிறது. மலையாளத்தில் படத்திற்கு பலத்த வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கிலும் படம் வெளியானது.

READ MORE – இளைஞர்களை கொண்டாட வைத்த ‘பிரேமலு’! ஓடிடிக்கு எப்போது வருகிறது தெரியுமா?

அதனை தொடர்ந்து தமிழ் ரசிகர்களும் இந்த திரைப்படம் தமிழில் வெளியானால் நன்றாக இருக்கும் என ஆசைப்பட்டனர். அவர்களுக்காகவே படம் தமிழகத்திலும் நாளை வெளியாகிறது. படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியீடுகிறது. ஏற்கனவே படம் மலையாளத்தில் வெளியாகி 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது .

READ MORE – மஞ்சும்மல் பாய்ஸ் மோகம் முடிந்ததா? அடுத்த தமிழில் கலக்க வரும் ‘பிரேமலு’ திரைப்படம்!

தற்போது தமிழிலும் படம் வெளியாகவுள்ள காரணத்தால் கண்டிப்பாக இன்னுமே படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது ஒரு புறம் இருக்க படம் எப்போது எந்த ஓடிடியில்  வெளியாகும் எனவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அவர்களுக்காகவே தற்போது ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அதன்படி, வரும் மார்ச் மாதம் 29-ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது . அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்றாலும் நம்ப தக்க சினிமா மாவட்டத்தில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்