சிவகார்த்திகேயன் நடித்து வரும் SK21 திரைப்படத்தின் கதை குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
SK21
நடிகர் சிவகார்த்திகேயன் அயலான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாகி வரும் தனது 21-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது சிவகார்த்திகேயனின் 21-வது படம் என்பதால் இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக SK21 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தினை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
கதைக்கு தேவைன்னா பிகினி என்ன? ‘நிர்வாணமாக நடிப்பேன்’! ஸ்வேதா மேனன் பேச்சு!
படத்தில் நடிகை சாய்பல்லவி தான் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படத்தில் இருந்து சின்னதாக க்ளீம்பஸ் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. வீடியோவில் சிவகார்த்திகேயன் வெறித்தனமாக படத்திற்காக ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தார். வீடியோவை பார்த்த பலருக்கும் படம் எந்த மாதிரி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகி இருக்கிறது.
SK21 கதை
இந்நிலையில், சிவகார்த்திகேயன் 21-வது படத்தின் கதை குறித்த தகவல் தற்போது கிடைத்து இருக்கிறது. அது என்னவென்றால், இந்த திரைப்படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை வைத்து தான் எடுக்கப்பட்டு வருகிறதாம். மேஜர் முகுந்த் வரதராஜன் ஏ.சி, இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்தவர். இவருடைய வாழ்வில் நடந்த சம்பவங்களை வைத்து தான் தற்போது SK21 திரைப்படம் உருவாகி வருகிறதாம்.
SK21 தலைப்பு
SK21 திரைப்படத்தின் தலைப்பு வரும் பிப்ரவரி 17ம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு, டைட்டில் மற்றும் டீசர் பிப்ரவரி 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…