எம்.ஜி.ஆர் இறப்பை முன்பே கணித்த பிரபலம்..வெளிவந்த சீக்ரெட்!

MGR

M.G.R : எம்ஜிஆர் உயிரோடு இருந்த சமயத்திலே அவருடைய இறப்பை ஒருவர் கணித்துள்ள தகவல் வெளியாகி இருக்கிறது.

எம்.ஜி.ஆர் திரை வாழ்க்கையிலும் சரி அரசியல் வாழ்க்கையிலும் சரி பலருடைய மனதில் இடம் பிடித்து நீங்காமல் இருக்கிறார் என்றே கூறலாம். எம்.ஜி.ஆர்  கடந்த 1987-ஆம் ஆண்டு டிசம்பர்  24-ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவருடைய மறைவு அந்த சமயமே தமிழகத்தையே உலுக்கியது என்றே கூறலாம்.

இந்நிலையில், இவர் சரியாக பலருக்கும் ஜோசியம் பார்த்து சொல்வாராம். அப்படி தான் ஒரு முறை எம்.ஜி.ஆரை பார்த்த போது அவருடைய கையை பார்த்தும் ஜோசியம் சொன்னாராம். அவர் சொன்னது எல்லாம் சரியாக எம்.ஜி.ஆர் வாழ்வில் அப்படியே நடந்ததாம். இந்த தகவலை எம்.ஜி.ஆருடன் பணியாற்றிய ஆடை வடிவமைப்பாளர் முத்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய முத்து ” அந்த காலத்தில் சாம் சுந்தர் என்று ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் இருந்தார். அவர் நன்றாக ஜோசியமும் பார்ப்பார். ஒரு முறை எம்.ஜி.ஆரின் கையை பார்த்துவிட்டு ஜோசியம் கூறினார். இன்னும் 4 ஆண்டுகளில் நீங்கள் தெய்வமாக திரும்பி வருவீர்கள் வெளிநாட்டில் இருந்து வருவீர்கள் உங்களுக்கு 3 கண்டங்கள் இருக்கிறது என்று கூறினார்.

அவர் கூறியது போலவே, எம்.ஜி.ஆருக்கு  ஒரு முறை கால் முறிவு ஏற்பட்டதாம். அதனை போல கன்னத்தில் துப்பாக்கி புல்லட் பட்டது. அவர் இறக்கும்போதும் வெளிநாட்டில் இருந்து தான் அவருடைய உடல் வந்தது. அப்படியே அந்த ஸ்டண்ட் மாஸ்டர் கூறியது அப்படியே எம்.ஜி.ஆர் வாழ்க்கையில் நடந்தது” எனவும் கண்கலங்கிய வாறு முத்து பேசி உண்மையை கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்