லால் சலாம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
லால் சலாம் திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.4.30 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லால்சலாம்
இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால்,செந்தில், நிரோஷா, தம்பி ராமையா, கபில்தேவ், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் லால் சலாம். இந்த திரைப்படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
லால்சலாம் விமர்சனம்
லால் சலாம் திரைப்படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ!
இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இருப்பதன் காரணமாக படத்தை மக்கள் கொண்டாடி வருகிறார்கள் என்றே சொல்லலாம். படத்தில் சொல்லப்பட்டு இருக்கும் கருத்துக்கள் மற்றும் ரஜினிகாந்த் நடித்த கதாபாத்திரம் எல்லாம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
லால்சலாம் வசூல்
இந்நிலையில், லால் சலாம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, ‘லால் சலாம்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் ரூ.4.30 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு இந்த அளவிற்கு ஒரு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ள காரணமே ரஜினிகாந்த் என்றே கூறலாம். படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து வருவதால் கண்டிப்பாக வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னுமே அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.