ஆண்டவரின் மெகா ஹிட் திரைப்படம் ரீமேக் ஆகிறதாம்.? ஹீரோ, இயக்குனர் இவர்களா?
Sathyaa : கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான சத்யா படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல்க வெளியாகியுள்ளது.
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ‘சத்யா’. இந்த திரைப்படத்தில் அமலா அக்கினேனியா, நாசர், கிட்டி, ஜனகராஜ், வடிவுக்கரசி, கவியூர் பொன்னம்மா, ஆர் எஸ் சிவாஜி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
படத்தை பார்த்த பலரும் அந்த சமயமே படம் பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாக கூறி இருந்தார்கள். அந்த சமயமே இந்த திரைப்படம் வசூல் ரீதியாக 8 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருந்தது. இந்த திரைப்படம் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீமேக் ஆகவுள்ளதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அதன்படி, ரீமேக் ஆகும் இந்த சத்யா திரைப்படத்தினை போர்த்தொழில் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான விக்னேஷ் ராஜா தான் இயக்கவிருக்கிறாராம். ஏற்கனவே போர்த்தொழில் என்ற பெரிய ஹிட் படத்தை கொடுத்த அவர் அடுத்ததாக ‘சத்யா’ படத்தின் ரீமேக் செய்யும் வேளைகளில் தான் ஈடுபட்டு வருகிறாராம்.
இந்த ரீமேக் படத்தில் கமல்ஹாசன் நடித்த அந்த கதாபாத்திரத்தில் நடிகர் அசோக் செல்வன் நடிக்க இருக்கிறாராம். இந்த படத்திற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று தற்போது முடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை இருப்பினும் தகவல்களாக வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.