ஷாருக்கானுக்கு அடுத்த ஹிட்! டன்கி படத்தின் வசூல் விவரம்!
ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஜவான், பதான் ஆகிய படங்கள் பெரிய வெற்றியை பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாக 1,000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இந்த வெற்றிகளை தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படமான ‘டன்கி’ படத்தை தேர்வு செய்து நடித்தார்.
இந்த திரைப்படத்தினை ராஜ்குமார் ஹிரானி என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஷாருக்கானுடன் டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், சதீஷ் ஷா, போமன் இரானி, ஜெர்மி வீலர், விக்ரம் கோச்சார் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
வசூலில் வேட்டை நடத்தும் சலார்! முதல் நாளில் மட்டும் இத்தனை கோடிகளா?
ஹிந்தி மொழியில் மட்டும் உருவாகியுள்ள இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாக படம் பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாக கூறி வருகிறார்கள்.
வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. அதன்படி, படம் வெளியான இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவலை தற்போது படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, டன்கி திரைப்படம் வெளியா 2 நாட்களில் உலகம் முழுவதும் 108 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.