சூர்யாவுக்கு இணையாக சண்டை போடும் திஷா பதானி! கங்குவா படத்தின் லேட்டஸ்ட் தகவல்!
பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி தற்போது நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் சிறுத்த சிவா இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. படம் 10 மொழிகளுக்கு மேல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், இந்த திரைப்படத்தில் திஷா பதானி எந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. அது என்னவென்றால், வழக்கமாக கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து வரும் திஷா பதானி இந்த திரைப்படத்தில் மிகவும் வித்தியாசமான பேசும் அளவிற்கு ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
கரகாட்டக்காரன் படம் நான் பண்ண வேண்டியது! நடிகை நிரோஷா வேதனை!
படத்தில் அவருக்கு என்று தனி சண்டைக்காட்சிகளும் இருக்கிறதாம். கிட்டத்தட்ட 6 சண்டைக்காட்சிகள் இருப்பதாகவும், அந்த காட்சிகளில் அனைத்துமே பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது. ஏற்கனவே, சண்டை பயிற்சிகளை மேற்கொள்ளும் திஷா பதானி வீடியோ வெளியாகி வைரலாகியும் வந்தது.
அந்த சண்டை பயிற்சிகள் அனைத்துமே கங்குவா படத்திற்காக தான். வழக்கமாக கவர்ச்சி நடிகையாகவே திஷா பதானியை பார்த்த அனைவரும் இந்த கங்குவா படத்தின் மூலம் ஆக்சன் நாயாகியாக பார்க்கபோகிறீர்கள். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் திஷா பதானிக்கு கங்குவா திரைப்படம் தான் முதல் தமிழ் திரைப்படம். கண்டிப்பாக கங்குவா திரைப்படம் வெளியான பிறகு அவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் இருந்தால் தமிழிலும் பட வாய்ப்புகள் குவிய அதிக வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கபடுகிறது.