நடிகர் விஸ்ணு விஷால் சமீபகாலமாக தொடர்ச்சியா பெரிய அளவில் பேசப்படும் கதாபாத்திரங்கள் கொண்ட படங்களையும் மக்களை கவரும் கதைகளையும் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், இவருக்கு FIR , கட்டா குஸ்தி ஆகிய படங்கள் எல்லாம் தொடர்ச்சியாக பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த வெற்றிகளை தொடர்ந்து லால் சலாம் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான அந்த திரைப்படத்தில் ரஜினிகாந்தும் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்திருந்தார். படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 9-ஆம் தேதி வெளியானது. வெளியானதில் இருந்து தற்போது வரை படம் சுமாரான விமர்சனங்களை பெற்று வருகிறது. படக்குழு எதிர்பார்த்த அளவிற்கு பிரமாண்ட வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட சுமாரான வரவேற்பு கிடைத்து இருக்கிறது.
இது ரீல் இல்லை ரியல்! மேடையில் செம குத்தாட்டம் போட்ட ஜெயம் ரவி!
இந்நிலையில், லால் சலாம் திரைப்படம் கொடுத்த குஷியில் நடிகர் விஷ்ணு விஷால் தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறாராம். அதன்படி, இனிமேல் அவர் தான் நடிக்கும் படங்களுக்கு சம்பளமாக 7 கோடி வரை வாங்கவுள்ளதாகவும், தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் தனக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது தன்னுடைய படங்கள் 30 கோடி வரை வசூல் செய்கிறது.
எனவே, எனக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால் எனக்கு சம்பளமாக இனிமேல் 7 கோடி வாங்கலாம் என்று கூற முடிவெடுத்து இருக்கிறாராம். இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது. மேலும் லால் சலாம் திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை தமிழகத்தில் மட்டும் 10 கோடி தான் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…