நாயகன் படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் கூட்டணி 37 ஆண்டுகளுக்கு பிறகு (Thug Life) தக்லைஃப் படத்தின் மூலம் இணைந்துள்ளது. இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தில், மலையாள நடிகர் துல்கர் சல்மான், நடிகை திரிஷா, நடிகர் ஜெயம்ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, ஆகியோர் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது. அதனை தொடர்ந்து கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு ‘தக்லைஃப்’ முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
ஆஸ்கர் விருது : 13 பிரிவுகளில் தேர்வான ஓப்பன்ஹெய்மர்!
இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இன்று முதல் படப்பிடிப்பு இனிதே ஆரம்பம் என ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில், அடுத்ததாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாக “Thug Life” படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு எச்.வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…