இன்று முதல் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு இனிதே ஆரம்பம்!

thug life movie

நாயகன் படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் கூட்டணி 37 ஆண்டுகளுக்கு பிறகு (Thug Life) தக்லைஃப் படத்தின் மூலம் இணைந்துள்ளது. இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில், மலையாள நடிகர் துல்கர் சல்மான், நடிகை திரிஷா, நடிகர் ஜெயம்ரவி, ஐஸ்வர்யா லட்சுமி,  ஆகியோர் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது. அதனை தொடர்ந்து கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு ‘தக்லைஃப்’ முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

ஆஸ்கர் விருது : 13 பிரிவுகளில் தேர்வான ஓப்பன்ஹெய்மர்!

இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இன்று முதல் படப்பிடிப்பு இனிதே ஆரம்பம் என ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில், அடுத்ததாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாக “Thug Life”   படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு எச்.வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்