லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன லியோ திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. படம் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி வெளியானது.
இந்த திரைப்படத்தினை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்க்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கெளதம் மேனன், அர்ஜுன், மிஷ்கின் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். திரையரங்குகளில் வெளியாகி இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. வசூல் ரீதியாக மட்டும் படம் உலகம் முழுவதும் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கிறது.
படம் திரையரங்குகளில் பார்க்காத ரசிகர்கள் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, லியோ திரைப்படம் வரும் நவம்பர் 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கீர்த்தி சுரேஷிற்காக கணவனிடம் வாய்ப்பு கேட்ட அட்லீ மனைவி! தோழி மீது ரொம்ப பாசம் தான்!
லியோ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தை திரையரங்குகளில் பார்க்காத ரசிகர்கள் ஓடிடியில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மேலும், லியோ படத்தை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளம் 120 கோடிகள் கொடுத்து படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே வாங்கியது.
அதைப்போல, படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை பிரபல தொலைகாட்ச்சியான சன் டிவி வாங்கியது. படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகிவிட்ட நிலையில், விரைவில் படம் எப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பு வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…