ஆஹா! STR48 பர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகிறது தெரியுமா?

STR48

நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 48வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது அவருடைய 48-வது படம் என்பதால் தற்காலிகமாக இந்த திரைப்படத்திற்கு STR48 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாக ஏற்கனவே படத்தின் இயக்குனரான தேசிங் பெரியசாமி பல பேட்டிகளிலும் கூறியிருந்தார். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிம்புவும் நீளமான தலைமுடியுடன் இருக்கிறார். எனவே படம் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சிம்பு ரசிகர்கள் அனைவரும் இந்த திரைப்படத்தினை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

கருப்பு உடையில் கவர்ச்சி! ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

படமும் நன்றாக வர வேண்டும் என்று பட குழுவும் தீவிரமாக வேலை செய்து வருகிறது. படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதால் படம் கண்டிப்பாக பெரிய அளவில் பேசப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டுமே கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகியிருந்த நிலையில் தற்போது அடுத்த அப்டேட்டாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற பிப்ரவரி இரண்டாம் தேதி தலைப்புடன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போது அப்டேட் கிடைக்கும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இந்த அப்டேட் அவர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்