இதை எதிர்பார்க்கவே இல்லை! விஜய்க்கு ‘குட் பை’.! சூர்யாவுக்காக களமிறங்கிய கார்த்திக் சுப்புராஜ்…!
Suriya 44 : சூர்யாவின் 44-வது திரைப்படத்தினை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக அறிவிப்பு.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் வைத்து படம் இயக்குவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். அதேபோலவே தளபதி 69 திரைப்படத்தினை அவர் தான் இயக்கப் போகிறார் என்ற தகவலும் பரவலாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. ஆனால் விஜய் கதையை கேட்டுவிட்டு சம்மதம் தெரிவித்து இருந்தால் கண்டிப்பாக தளபதி 69 அப்டேட் வந்திருக்கும்.
ஆனால், தற்போது கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக சூர்யா வைத்து படம் இயக்குவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, சூர்யாவின் 44 வது திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான் இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தினை சூர்யாவின் 2டிநிறுவனமே தயாரிக்கவும் செய்கிறது. மிரட்டலான போஸ்டர் ஒன்று வெளிய வந்து இந்த படத்திற்கான அப்டேட்டும் வெளியாகி இருக்கிறது.
படத்தில் எந்த பிரபலங்கள் எல்லாம் நடிக்கிறார்கள். படத்திற்கு யார் இசையமைக்கிறார் என்பதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜும் ஒரு படத்தின் மூலம் இணைந்துள்ள காரணத்தால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்புகளும் அதிகமாகியுள்ளது.
New beginnings..!
Need all your good wishes! #LoveLaughterWar@karthiksubburaj pic.twitter.com/uxi34DFP4u— Suriya Sivakumar (@Suriya_offl) March 28, 2024
மேலும், சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட வேலைகள் தற்போது மும்மரமாக நடைபெற்ற வருகிறது. சமீபத்தில் படத்தின் டீசர் கூட வெளியாகி இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 43-வது திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.