பட வாய்ப்புக்காக அப்படி பண்ணல! நடிகை ஐஸ்வர்யா மேனன் வேதனை!
Iswarya Menon : பட வாய்ப்புக்காக நான் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடவில்லை என நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் காதலில் சோதப்புவது யெப்படி, தீய வேலை செய்யணும் குமாரு, தமிழ்ப் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் படங்களில் நடித்து பிரபலமானதை விட கவர்ச்சியாக உடை அணிந்து கொண்டு போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் பிரபலமானார் என்றே கூறலாம்.
இவருடைய கவர்ச்சி புகைப்படங்களுக்காகவே இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது என்றே கூறலாம். இவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டாலே இவர் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தான் இப்படியான புகைப்படங்களை வெளியீடுகிறார் என்று விமர்சிப்பார்கள். இந்த விமர்சனம் தனக்கு வேதனை அளிக்கிறது என ஐஸ்வர்யா மேனன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ஐஸ்வர்யா மேனன் ” நான் புகைப்படங்களை வெளியீட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பதால் தான் புகைப்படங்களை வெளியீடுகிறேன். ஆனால், இதனை நான் பட வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதால் பட வாய்ப்புகள் வரவேண்டும் என்று கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிடுவதாக சொல்கிறார்கள். அவர்கள் இப்படி சொல்வது என்னுடைய மனதிற்கு ரொம்பவே வேதனை தருகிறது.
அவர்கள் இப்படி பேசுவதை நான் அப்படியே கண்டுகொள்ளாமல் நகர்ந்து சொல்கிறேன். வேறு என்ன செய்யமுடியும்? ஆனால், எனக்கு பட வாய்ப்புகள் இல்லாததால அல்லது பட வாய்ப்புகள் வேண்டும் என்று நான் பண்ணல. எனக்கு ஒரு பட வாய்ப்பு வரவேண்டும் என்று இருந்தது என்றால் அது வந்தே தீரும். அதனை யாரும் தடுக்கமுடியாது” என நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார்.
மேலும், நடிகை ஐஸ்வர்யா மேனன் கடைசியாக தெலுங்கில் ஸ்பை எனும் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று ஹிட் ஆனது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பஸூக்கா என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.