ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சங்கீத் குமார் என்பவர் 1988-ம் ஆண்டு லண்டனில் செயற்கை கருத்தரிப்பின் முறையில் ஐஸ்வர்யா ராய்க்கு பிறந்தவர் என்று கூறியுள்ளார். தன்னை 3-வயது வரை ஐஸ்வர்யா ராயின் பெற்றோர்களான கிருஷ்ணராஜ் ராய் மற்றும் பிரிந்தியா ராய் அவர்கள் வளர்த்ததாகவும் பின்னர் மும்பையில் இருந்து ஆந்திராவிற்குத் தனது வளர்ப்புத் தந்தை ஆதித்தியா ராய் அழைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். தனது தாத்தா கிருஷ்ணராஜ் ராய் ஏப்ரல் 2017-ல் இறந்ததாகவும் அவர் கூறி இருக்கிறார் (உண்மையில் அவர் இறந்தது மார்ச் மாதத்தில்).
“நான் என் அம்மாவைச் சந்திக்க கூடாது என்று 27 வருடங்களாக என் உறவினர்கள் என்னைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தனர், மேலும் நான் ஐஸ்வர்யாவின் மகன் என்பதற்கான ஆதாரங்களையும் அவர்கள் அழித்து விட்டார்கள், இப்போது என் தாய் தனது கணவன் அபிஷேக் பச்சனை பிரிந்து தனியாக வாழ்கிறார், தனிமையில் வாடும் என் அம்மாவிற்கு ஆதரவாக இருக்கவே நான் விரும்புகிறேன்” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அவர் சொல்வதை எல்லாம் உண்மை என்று வைத்துக் கொண்டால், 1988-ம் ஆண்டில் ஐஸ்வர்யாவின் வயது 15 மட்டுமே, அப்படிப் பார்த்தால் 14-வயதிலேயே அவர் கர்ப்பம் அடைந்திருக்க வேண்டும். மேலும் அவர் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் இணைந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே உண்மை. இந்த இளைஞர் ஒருவேளை அவரது தீவிர ரசிகராக இருக்கலாம் இப்படி ஏதாவது செய்தால் ஐஸ்வர்யா ராயை சந்திக்க முடியும் என்கிற நம்பிக்கையில் இந்தச் செய்தியை பரவ விட்டிருக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது ராகேஷ் ஓம்பிரகாஷ் அவரின் ‘ஃபன்னே கான்’ என்னும் நகைச்சுவை படத்திற்கான ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார் ஐஸ்வர்யா ராய்…
source: dinasuvadu.com
சென்னை : இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் தீபாவளி…
டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் …
தஞ்சை : மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல்…
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே…
ராஞ்சி : ஜார்கண்டில் மொத்தமாக உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த…